தமிழகம்

தொண்டியில் தமுமுக-வின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் : உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை

ராமநாதபுரம், ஜூலை.5:-

தமிழ் நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நடத்தும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புனர்வு கூட்டம் மாலை தொண்டி தெற்கு தெரு ஜமாத் ஹாஜி அப்துர் ரஹீம் சமுதாய நலக்கூடத்தில் ஷெரிபா ஜெயினுலாப்தீன் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார். ஆலிமா முத்து நாச்சியா வரவேற்புரை நிகழ்த்தினார். கவுன்சிலர் சமீமா பானு சிற்றுரை ஆற்றினார். ஜென்னத்துல் பிர்தவ்ஸ் , ஜூனைதா பானு, கோட்டையம்மாள் , பரிதா பானு நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் ஆகியோர் குழந்தைகள் நலன் நல்லொழுக்கம் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்தினர்.

உளவியல் ஆலோசகர் சமீமா “குழந்தைகளை பாதுகாப்போம். பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம். நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கைகளில் இருக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால்தான் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். குடும்பம் பாதுகாப்பாக இருந்தால்தான் சமூகம் பாதுகாப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் போஸ்கோ சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படாத சம்பவங்களும் இருக்கின்றன. இந்த நிலையில் பெற்றோர்களும் பொதுமக்களும் போஸ்கோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் . நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ” என்று சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு போஸ்கோ சட்டத்தின் மூலமாக உண்மை அறிந்து சரியான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும், பெண்கள் பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், தொண்டி பேரூராட்சியில் பல்வேறுவார்டுகள் குறிப்பாக 13 வது வார்டில் கழிவு நீர் கால்வாய்க்கு நிதி ஒதுக்கியும் அந்த நிதி எங்கே என்று தெரியவில்லை. அப்பகுதி மக்களுடைய நலன் கருதி தொண்டி பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இரண்டு மூன்று தினங்களில் பேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும், மேலும் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இப்பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இல்லை. மேலும் மாணவிகள் தங்கும் ஹாஸ்டல் வசதி மிக குறைவாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆலிமா செய்யதுசுல்தான் பீவி சித்திக்கியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button