கொடைக்கானலில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு அறுவடை துவக்கம்

கொடைக்கானல்,ஜூலை.13:-
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மலைப்பூண்டுதான் புகழ்பெற்றது அதில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர்,
கவுஞ்சி,பூண்டி பகுதிகளில் அதிக அளவில் மலைப்பூண்டு விவசாயம் பயிர் செய்யப்படுகிறது இந்த மலைப் பகுதிகளில் நிலவும் குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் தனித்துவமான சுவை மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த மலைப்பூண்டு உலக அளவில் புகழ் பெற்றதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயன்பாட்டிற்கு வாங்கி செல்கின்றனர் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் இந்த மலைப்பூண்டுக்கு தமிழ்நாடு அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது . இதனால் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதியில் உள்ள விவசாயிகள் மலைப்பூண்டு விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டி விவசாயம் செய்து வரும் நிலையில் மலைப்பூண்டு அறுவடை தற்போது துவங்கப்பட்டு ஒருகிலோ பூண்டின் விலை 500 முதல் 600 வரை விற்கப்படும் நிலையில் இந்த ஆண்டு போதிய மலை இல்லாததால் பூண்டு விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.



