ராமேசுவரம் தங்கும் விடுதியில் தனியாக தங்கி இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை…!

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள நடுத்தெருவில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதியில் தனியாக தங்கி இருந்த நாமக்கல்லை சேர்ந்த பெண் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமேசுவரம் உலக பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று என்பதால் இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ராமேசுவரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி திருக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேசுவரத்தை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனால் ராமேசுவரம் கோவிலை சுற்றி 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கணேஷ்புரம் பகுதியைச் சேர்ந்த பிரியா (38) என்பவர் நேற்று (செவ்வாய்கிழமை) தனியாக ராமேசுவரத்திற்கு பேருந்தில் வந்துள்ளார்.
ராமேசுவரம் வந்த பிரியா ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள நடுத்தெருவில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தனியாக தங்கி உள்ளார்.
நேற்றில் இருந்து அறையை விட்டு பிரியா வெளியே வராமல் இருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) இரவுடன் அறையின் நேரம் முடிவதால் அறையை காலி செய்ய சொல்வதற்காக பிரியா தங்கி இருந்த அறையை விடுதி ஊழியர்கள் வெகு நேரமாக தட்டியுள்ளனார். ஆனால் அறை திறக்கப்படாததால் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது பிரியா தனது துப்பட்டாவால் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக ராமேசுவரம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.
ராமேசுவரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தனியாக வரும் நபர்களுக்கு அறை கொடுப்பதில்லை ஆனால் தனியாக வந்த பிரியாவுக்கு விடுதி நிர்வாகம் எப்படி அறை வழங்கினார்கள்? யாரேனும் போலீசார் சரிபாரிசு செய்தார்களா என போலீசார் தனியார் தங்கும் விடுதி மேலாளரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே பிரியா ஆதார் அட்டையில் உள்ள வீட்டு முகவரியை கொண்டு அவரது கணவர் செல்வமணி தெரியவந்ததையடுத்து நாமக்கல் போலீசாரை தொடர்பு கொண்ட ராமேசுவரம் நகர் காவல் நிலைய போலீசார் வீட்டில் உள்ள நபர்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
ராமேசுவரம் கோவில் எதிரே உள்ள விடுதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமேசுவரம் வந்துள்ள வெளியூர் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



