ராமநாதபுரம் அருகே 2-ம் ஆண்டு ராஜகோபுர வருடாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

கடலாடி,ஜூலை.13:-
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், அ.புனவாசல் ஊராட்சிக்குட்பட்ட ஏந்தல் கிராம எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிர மூர்த்தி அய்யனார், ஸ்ரீ பொன்னந்தி காளியம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் திருக்கோவிலில் 2-ம் ஆண்டு ராஜகோபுர வருடாபிஷேக விழா நேற்று பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை முதல் யாகசாலை பூஜைகள் , புனித நீர் குடங்கள் புறப்பாடு , மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் , மகா தீபாராதனை ஆகியவை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.


அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.பல்வேறு ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், ஆலய குடிமக்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர்.பின்னர் மூலவர் ஸ்ரீ கண்ணாயிர மூர்த்தி அய்யனார், ஸ்ரீ பொன்னந்தி காளியம்மன், ஸ்ரீகருப்பணசாமிக்கு பால் , தயிர் , சந்தனம் , இளநீர் விபூதி , குங்குமம் , உள்ளிட்ட 9 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.



