தமிழகம்

ராமநாதபுரம் கிழக்கு நாடார் உறவின்முறை சங்க கட்டிடம் முன்பு காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா கோலாகலம் : நாடார் பேரவை, சமத்துவ மக்கள் கழகம் இணைந்து கொண்டாடினர்

ராமநாதபுரம்,ஜூலை.15:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் மற்றும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் வழிகாட்டுதலில் , இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாட்டில்
கல்வி, விவசாயம் , தொழில்துறை மூன்றிலும் தமிழ்நாட்டை முன்னேற்றிய முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா ராமநாதபுரம் கிழக்கு நாடார் உறவின்முறை சங்க கட்டிடம் முன்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் திருஉருவ படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து , மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் கிழக்கு இராமநாதபுரம் நாடார் உறவின்முறை தலைவர் பழனிச்சாமி நாடார், பொதுச்செயலாளர் உலகநாதன், துணைத் தலைவர் வாசி ராஜன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நாடார் பேரவை மாவட்ட அவைத் தலைவர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பிரசாந்த் குமார் மற்றும் கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் மற்றும் நாடார் பேரவை , சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இதனைத் தொடர்ந்து மண்டபம் ஒன்றியம் தாமரைக்குளம் மற்றும் இரட்டையூரணி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என திரளாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கு கல்விக்கண் திறந்த காமராஜரின் நினைவாக இலவச நோட் புக், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் எதிரியுள்ள ராமநாதபுரம் கிழக்கு நாடார் உறவின் முறை சங்க கட்டிட வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் இணைந்து கோலாகலமாக கொண்டாடினர்.ராமநாதபுரம் கிழக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிச்சாமி நாடார், பொதுச்செயலாளர் உலகநாதன், துணைத்தலைவர் வாசி நாதன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நாடார் பேரவை மாவட்ட அவைத் தலைவர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பிரசாந்த் குமார்,கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button