தமிழகம்

ராமநாதபுரம் அருகே காமராஜர் 124-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை :தவெக மாவட்ட நிர்வாகி G.M.முரளி ஏற்பாடு

பனைக்குளம்,ஜூலை.16:-

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், கர்ம வீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் ரெட்டையூரணி, தாமரைக் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட தவெக சார்பில் நிர்வாகி G.M.முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக்கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவின் படி, பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் ஆலோசனையின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள தவெக நிர்வாகிகளால் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட தவெக நிர்வாகி G.M.முரளி தலைமையில் மண்டபம் யூனியன் தாமரைக்குளம் மற்றும் ரெட்டையூரணி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் சிவக்குமார், சண்முக பாண்டியன், வைரவன் மகேந்திரன், மணிகண்டன், சியாபுதீன், அருண் ஜெட்லி, வரதராஜன், பாலமுருகன், முரளி, ராஜேஷ், சதீஷ்குமார், வராஹி ராஜேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button