தமிழகம்மாவட்ட செய்திகள்

தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு…!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் தேவிபட்டினத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் Dr.S.P.சுரேஷ் அறிவுறுத்தலின் பேரில்  மீன்வள துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் (வடக்கு) வழிகாட்டுதலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி, மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் M.ஜெயராஜ் தலைமையில் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், மேற்பார்வையாளர் செல்வகுமார் மற்றும் கடல் அமலாக்கப்பிரிவு காவலர் காதர் இபுராஹிம் ஆகியோருடன் தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் ரசாயணம் மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை செய்யப்பட்டது.

இதில் 7.5 கிலோ கெட்டுப்போன மீன்களை ஆய்வு செய்து அதிகாரிகளால் அழிக்கப்பட்டது. மேலும் ரசாயணம் கலந்த மீன்கள் ஏதும் விற்கபடவில்லை என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது.

இது போன்ற ஆய்வுகள் வருங்காலங்களில் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடைகளுக்கு முறையான உரிமம் பெற்றுள்ளார்களா என்பதையும் ஆய்வு செய்தனர். கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button