ராமநாதபுரத்தில் விழாக்கோலம் பூண்ட திரையரங்கு…!

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர், தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படம் இன்று காலை முதல் திரையிடப்பட்டது. இதில் தமிழக திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை தீபாவளி போல கொண்டாட வேண்டும் என தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திரௌயரங்குகள் விழாக்கோலம் பூண்டது.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் குமரய்யா கோவிலில் உள்ள தி சினிமா லாண்ஞ் தியேட்டரில் ராமநாதபுரம் மாவட்ட த.வெ.க நிர்வாகி G.M.முரளி தலைமையில், மாவட்ட மகளிரணி நிர்வாகி கவிதா சசிக்குமார் முன்னிலையில் நிர்வாகிகள்
முருகேசன், வின்சென்ட் ராஜா, சுபா வைரவன், CB.மணிகண்டன், மாரிமுத்து, RG.மணி, வித்யா, அருண் ஜெட்லி, நாகேந்திரன் மற்றும் ரசிகர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில் வெளியான “ஜனநாயகன்” திரைப்படத்தை வரவேற்று உற்சாகமாக திருவிழா போல் கொண்டாடினர். பேண்ட் வாத்தியங்கள் முழங்க தளபதி வாழ்க என ஆரவாரமாக கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் இந்த கோலகல கொண்டாட்டத்தினால் ராமநாதபுரம் தி சினிமா லாண்ஞ் தியேட்டரே விழாக்கோலம் பூண்டது. மதியம் 12 மணி காட்சிக்கான டிக்கெட்டுகளை திரையரங்கில் உள்ள ஒரு திரையில் 100-க்கும் மேற்பட்ட த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி G.M.முரளி தனது சொந்த செலவில் முன் கூட்டியே வாங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கதொன்றாக இருந்ததுடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



