தமிழகம்

ராமேசுவரத்தில் நாளை நடக்கிறது-ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில் தவெக அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை…!

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திராவிட முன்னேற்றக்கழகம் தலைமை ஆணைக்கிணங்க ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் நாளை காலை 9.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு,குழந்தைகளின் பின்னால் ஒழிந்து கொண்டு அரசியல் செய்யும் த.வெ.க அமைச்சர் சரத்காமாரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

எனவே,மாநில/மாவட்ட நிர்வாகிகள்,பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளாளர்கள்,அனைத்து அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக நிர்வாகிகள், மாணவரணி ஒன்றிய அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button