நீங்களும்,நானும் ஒண்ணு அரசு அதிகாரி வாயில மண்ணு:அம்பலமானது 3 முட்டாள் நிருபர்களின் சதித்திட்டம்…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவரை செய்தி என்ற பெயரில் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலி வணக்கம் தமிழகம் நாளிதழின் டுபாக்கூர் ஆசிரியர் தில்லை கார்த்தியுடன் இணைந்து மூன்று முட்டாள் நிருபர்கள் தீட்டிய சதித்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது. இச்சம்பவமானது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவரை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சதித்திட்டம் தீட்டி போலி வணக்கம் தமிழகம் நாளிதழின் டுபாக்கூர் ஆசிரியர் தில்லை கார்த்தியின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தும் வகையிலான போலி சிலைடு செய்தி வெளியிட்டதன் பின்னணியில் மூன்று முட்டாள் நிருபர்கள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.அதில் ஒருவர் போலி வணக்கம் தமிழகம் பத்திரிக்கையில் மாவட்ட நிருபராக பணிபுரியும் ஏர்வாடி செய்யது அபுதாஹிர்,இன்னொருவர் “தூங்கா மாநகரின் பெயரில் மணி ஆட்டும்” பத்திரிக்கையில் ராமநாதபுரம் மாவட்ட நிருபராக பணியாற்றிக் கொண்டே முழு நேரமும் அரசு ஊடக ஸ்டிக்கருடன் மாநிலம் விட்டு மாநிலம் குரங்கு போல தாவி வாடகைக்கு வண்டி ஓட்டுபவர்,இவர்கள் இருவரும் வெறும் கைத்தடிகள் தான்.இவர்களை கைப்பாவையாக வைத்து இந்த மிரட்டல் சம்பவத்தில் முழுக்க இயக்கியது வசூலில் முதலிடம் வகிக்கும் புகழ்பெற்ற அரசியல் கட்சி நடத்தும் பத்திரிக்கையில் தூங்கா மாநகரின் பதிப்பில் ராமநாதபுரம் மாவட்ட நிருபராக பணியாற்றும் அந்த ஒருவர்.இவர்களது சதித்திட்ட வேலைகளுக்கு சற்றும் அசைந்து கொடுக்காத அந்த அரசு அதிகாரிக்கு பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி பலரும் ராயல் சல்யூட் அடித்து வருகின்றனர்.பத்திரிக்கையாளர்களுக்கான அரசு சலுகைகளை அவல்,பொரியென நினைத்து எனக்கொன்று,என் பொண்டாட்டிக்கொன்று என்பதோடு நின்று விடாமல்,என் மச்சினனுக்கும் வேண்டும் என அடம்பிடித்த வசூலில் முதலிடம் வகிக்கும் புகழ்பெற்ற அரசியல் கட்சி நடத்தும் பத்திரிக்கையின் நிருபருக்கு பொண்டாட்டி மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு சலுகை சட்டென பறிக்கப்பட்டதால் “உள்ளதும் போச்சே நொல்லக்கண்ணா” என தலையிலடித்து உட்கார்ந்ததை நினைத்து மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஆத்ம திருப்தியில் இருக்கின்றனர்.இதனிடையே முட்டாள் நிருபர்கள் மூவரின் இந்த சதித்திட்டங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அந்த அரசு அதிகாரி நீங்க மூவரும் சேர்ந்து என்னை மூணு கூறாக அறுத்து மூணு மார்க்கெட்டில் கூறு 20 ரூபாய்க்கு கூவி,கூவி விற்பனை செய்தாலும் உங்கள் மிரட்டலுக்கு நான் பணிந்து உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரமாட்டேன் என கறாராக தெரிவித்து விட்டாராம்.போலி பத்திரிக்கைகளுக்கும்,தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கும் தெரியாமல் கொடுத்த சலுகைகளை திரும்ப பெற்றதால் வந்த வினைதான் இது என அனைத்து தரப்பினருக்கும் தற்போது தெளிவாக தெரிய வந்துள்ளது.மேலும் இது தொடர்பாக இன்னும் எத்தனை வினை வந்தாலும் சந்திக்க அந்த அரசு அதிகாரி தயாராக இருப்பதாக கட் அண்ட் ரைட் முடிவும் எடுத்து விட்டாராம்.ஆனால் எனக்கு ஒரு கண் போனால்,என் கண்ணை நோண்டியவர்களின் இரண்டு கண்களையும் நான் நோண்டுவேன் என சபதம் எடுத்து டூப்ளிகேட் நிருபர் தொட்டுக்க ஊறுகாயாக வைத்திருக்கும் பாண்டிச்சேரி பத்திரிக்கை அலுவலகத்திற்கும்,தூங்கா மாநகரத்தில் மணி ஆட்டும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும்,வசூலில் முதலிடம் வகிக்கும் புகழ்பெற்ற அரசியல் கட்சி நடத்தும் பத்திரிக்கை அலுவலகத்திற்க்கும் தனது நலன் விரும்பிகள் மூலமாக ஆதாரங்களுடன் நேரடி பெட்டிசன் போட தீர்க்கமான முடிவொன்றையும் எடுத்துள்ளாராம்.

எது எப்படியோ வரம் கொடுத்தவன் தலையில் கை வைப்பது போல செயல்படும் முட்டாள் நிருபர்கள் மூவரின் கொட்டம் அடக்கப்படுமா? என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பு:-

இதில் முதல் முட்டாளான டூப்ளிகேட் நிருபர் செய்யது அபுதாஹிர் பெயர் தவிர மற்ற இரண்டு மற்றும் மூன்றாவது முட்டாள் நிருபர்களின் பத்திரிக்கை மற்றும் பெயரை வெளிப்படையாக எழுதாதது பயமா? என பலதரப்பினரும் கேள்வி கேட்கலாம்.
பயம் என்பதை தாண்டி நல்லா வச்சி செஞ்சி விட்ரணும்,அதையும் தரமா செய்யணும்.புகைப்படங்கள்,கூடுதல் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அவரவர்கள் சொந்த ஊர்களில் தாலுகாவில் பணியாற்றும் நிருபர்களிடம் சேகரிக்கப்பட்டு வருகிறது.வந்ததும் பொறுமையா,நிதானமா வச்சி செஞ்சு திருவிழா போல போஸ்டர் அடிச்சு கும்பாபிஷேகம் நடத்தி விட்ற வேண்டியதுதானே.அதைவிட நமக்கு வேற என்ன வேலை.

🔴⚫விடாது கருப்பு…



