தமிழகம்மாவட்டச் செய்திகள்

காத்தாடி விடும் திருவிழா

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் புல்வெளி சூழலில், சுற்றுலாத்துறை சார்பாக காத்தாடி விடும் திருவிழா, 3 ஆவது நாளாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழாவில் ஒரு அங்கமாக மன்னவனூர் புல்வெளி சூழல் சுற்றுலா தளத்தில், வண்ண வண்ண கண்கவர் காத்தாடி விடும் திருவிழா நடத்தப்பட்டது. சுற்றுலா துறையும் தனியார் சங்கமும் இணைந்து இந்த நிகழ்வை பசுமையான புல்வெளி சூழலுக்கு நடுவே, மன்னவனூர் சுற்றுலா தளத்தில் நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் அவற்றை கண்டு ரசித்தும் பட்டம் விட்டும் மகிழ்ந்தனர்.கடந்த சனிக்கிழமை துவங்கிய இந்த காத்தாடி திருவிழா,3 நாளாக நேற்று நடத்தப்பட்டு இன்றோடு,நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button