அரசியல்தமிழகம்

அமைச்சருடன் சந்திப்பு…!

மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை பாம்பன் த.வெ.க நிர்வாகிகள்,மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை  தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.அதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக ஸ்ரீநாத் பொறுப்பேற்றுள்ளார்.

அவரை மரியாதை நிமித்தமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த தமிழக வெற்றி கழக பிரமுகர் கேவிஸ்டன் தலைமையில்  தங்கச்சிமடம் தமிழக வெற்றி கழக பிரமுகர்கள் சகாயராஜ் அந்தோணி பாவு மற்றும் மீனவ பிரதிநிதி மெரிஸ்டன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சென்னைக்கு சென்று அவரை சந்தித்தனர்.

ராமேசுவரம் தீவு பகுதி மீனவர் நலன் குறித்தும் இலங்கையில் சிறை பட்டுள்ள மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் சார்பில் அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது 

அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர் ஜோசப் விஜய்க்கு இது  குறித்த தகவல்களை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button