தமிழகம்

கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது தான் ஜோசப் விஜய் முன்மொழிந்த “மாற்று” அரசியலா? : நயினார் நாகேந்திரன்

கடந்த 2011-க்கு முந்தைய திமுகவின் கோர ஆட்சியின் நீட்சியாக தற்போதைய தவெக ஆட்சி செயல்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தவெக ஆட்சி அமைத்த 15 நாட்களிலேயே கொடூரக் குற்றச் சம்பவங்கள், சிறுவர் சிறுமியரின் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், ஆளுங்கட்சியினரின் மாமூல் வேட்டைகள், பெட்ரோல் குண்டு வீச்சுகள், இப்பொழுது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் என தமிழக மக்கள் தினம் தினம் அல்லல்படுவதைக் கண்டு கொள்ளாமல், ரீல்ஸ் மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.

ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், பாதுகாப்பு, மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என அனைத்திலும் கோட்டை விட்டு விட்டு, கமுக்கமாக கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது தான் ஜோசப் விஜய் முன்மொழிந்த “மாற்று” அரசியலா? தங்களின் அடிப்படைத் தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டுமென போராடும் மக்களை அலட்சியப்படுத்துவது தான் தவெகவின் அனைவருக்குமான ஆட்சியா?

“திமுக எனும் தீயசக்தியை அழிக்க வந்த தூயசக்தி” என்று கூறிக்கொண்டு, திமுகவின் “அல்லக்கை” போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தவெக அரசு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button