போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை…!

நயினார்கோவில் அடுத்த கூவிளாபுரம் கிராமத்தில் கோவுல் திருவிழாவில் கடந்த 108 ஆண்டுகளாக வள்ளி திருமண நாடகம்,சின்ன கருப்பு நாடகம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பதால் நாடகம் நடத்த அனுமதி அளிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் சந்தித்து கிராம மக்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அடுத்த கூவிளாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிநாகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
சுமார் மூன்று தலைமுறையாக 100 ஆண்டுகளுக்கு மேல் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.இத்திருவிழா காப்பு கட்டுதளுடன் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி,பால்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.கோவில் திருவிழாவிற்கு பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருவிழா நாட்களில் வள்ளி திருமண நாடகம், சின்ன கருப்பு பெரிய கருப்பு நாடகம்,பாண்டிச்சாமி நாடகம் என இரவு நேரங்களில் பாரம்பரிய நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு திருவிழாவின்போது நாடகங்கள் நடத்தக்கூடாது என நயினார் கோவில் போலீசார் அனுமதி மறுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி நடைபெற்று வரும் நிலையில் வரும் 29ஆம் தேதி பூக்குழி உற்சவம் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் நாடகம் நடத்த காவல்துறையினர் இந்தாண்டும் அனுமதி அளிக்காததால் கூவிளாபுரம் கிராம மக்கள் ஆண்டு திருவிழாவின் போது நாடகம் நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ்ஐ நேரில் சந்தித்து மனு அளித்தனர்.



