சென்னை தலைமைச் செயலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம்:அமைச்சர்கள் ஸ்ரீநாத்,மரு.வே.க.ராஜீவ் தலைமையில் நடந்தது!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் 22.02.2026 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை மீட்பது தொடர்பாகவும்,மீனவர்களின் பல்வேறு நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மீனவர் சங்கங்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த அமைச்சர்கள்,அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று,உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.மேலும்,கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவாக மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் கே.விஜய கார்த்திகேயன்,பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



