ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கு:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு வளாகத்தில் உள்ள ராமநாதபுரம், முதுகுளத்தூர்,திருவாடானை,பரமக்குடி (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தாசில்தார்கள் அமர்நாத் (தேர்தல்),காளீஸ்வரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள்,அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.



