தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம்:பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் புகார்:டீன் விளக்கம்!!!

சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில் மேல் சிகிச்சைக்காக அந்த பெண்னை மதுரை ராஜாஜி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் மறுத்ததால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸில் அந்த பெண்ணை  வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பால்கரை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (35). இவர் அங்கன்வாடியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் செல்விக்கு சைனஸ் நோய்க்கு அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்துள்ளது.அந்த ஆபரேஷனுக்கு பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாகவும் தற்போது அவர் உயிரிழந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனை நிர்வாகம் வைத்திருப்பதாக குற்றம்சாட்டும் தமிழ்செல்வின் உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று காலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை  முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்ச்செல்வியின் உறவினர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போது போலீசாருக்கும்,உறவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று மாலை தமிழ்ச்செல்வியை மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மதுரை ராஜாஜி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்சில் ஏற்றிய போது மதுரைக்கு தமிழ் செல்வியை அனுப்ப விடாமல் உறவினர்கள் தடுத்து நிறுத்தினர்.இதனால் ஆம்புலன்ஸில் தமிழ்ச்செல்வி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக வென்டிலேட்டர்  (செயற்கை சுவாச கருவியின்) உதவியுடன் காத்திருந்தார்.அதன் பின்னர் மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் தமிழ்ச்செல்வியை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.தவறாக சிகிச்சை அளித்ததால் தொடர்ந்து உடல்  நிலை பாதிக்கப்பட்டு,தமிழ்ச்செல்வி தற்போது உயிருடன் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது  எனவே தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் குவிந்தத்ததால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.இதனையடுத்து தமிழ்செல்வியின் உறவினர்களிடம் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி டீம் அமுதாராணி பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் தமிழ்ச்செல்வியை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும், சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டும், தவறா மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதா  என மருத்துவக் குழு அமைத்து விசாரணை  செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இது குறித்து மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கலந்து ஆலோசித்து விட்டு முடிவெடுப்பதாக டீன் அமுதா ராணி தெரிவித்தார்.

இது குறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் அமுதாராணி கூறியதாவது:- 

தமிழ்செல்விக்கு சைனஸ் தொடர்பாக ராமநாதபுரம் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.ஆப்ரேஷன் செய்யும்போது ஒரு சில நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் அதே போல் உடல்நிலை பாதிக்கப்பட்டது ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவருடைய உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து  வருகிறது.தமிழ் செல்வி உயிருடன் இருக்கிறார்.நேற்று அவருக்கு கஞ்சி மற்றும் இளநீர் வழங்கப்பட்டது.மேல் சிகிச்சை அளிப்பதற்காக அருகே உள்ள மதுரை ராஜாஜி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால்  உறவினர்கள் அழைத்துச் செல்ல அனுமதிக்காததால் மீண்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button