தமிழகம்மாவட்டச் செய்திகள்

தொண்டி பேரூர் த.மு.மு.க சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக 31ம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சமுக நீதி மாணவர் இயக்கம்  சார்பாக 31ம் ஆண்டு  கல்வி விழிப்புணர்வு மற்றும் மாணவ,மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவரும் தொண்டி ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஜிஃப்ரி தலைமை தாங்கினார்.

தொண்டி 15வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.நாச்சியா இறைவசனம் ஓதி நிகழ்வை துவங்கி வைத்தார்.தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,இஸ்லாமிக் மாதிரி மெட்ரிகுலேஷன் பள்ளி,அல் ஹிலால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,அமீர் சுல்தான் அகடாமி,வில்கம் உயர்நிலைப்பள்ளி, மற்றும் நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளி,ஆகிய பள்ளிகளில் 10ம் வகுப்பு,12ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி  பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.இதில் த.மு.மு.க மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா,தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன்,தொண்டி ஐக்கிய ஜமாத் செயலாளர் பாரூக் ஹாஜியார்,ஐக்கிய ஜமாத் கௌரவ தலைவர் பொறியாளர் எம்.எம்.அபூபக்கர்,ஐக்கிய ஜமாத் பொருளாளர் ஜலால்,அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அப்துல் ரவுப் நிஸ்தார்,இந்து தர்ம பரிபாலன சபையின் கௌரவ தலைவர் பாலசுப்பிரமணியம்,இந்து மத தர்ம பரிபாலன சபை தலைவர் எல்.ஆர்.சி ராஜசேகர்,பவுசியா,புரோஸ் கான்,பொறியாளர் சபியுல்லாஹ்,அபு ஹாரிஸ் கரீம்,நவ்பல்,அஸ்கர்,சகோதரி சரிபா 14வது வார்டு கவுன்சிலர் சமீமா பானு,சகோதரி நாச்சியார்  தொண்டியைச் சேர்ந்த அனைத்து ஜமாத்தார்கள் அனைத்து சமுதாயத் தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முனைவர்.சுல்தான் கலீபா,ஹாருண் அல் ரஷீத்,ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஐநாவின் நிலையான வளர்ச்சித்திட்டத்தின் தூதுவர் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே சிறப்புரை நிகழ்த்தினர்.இந்த நிகழ்வில் தொண்டி மற்றும் நம்புதாளையில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கல்விச்சேவை சிறந்த முறையில் செய்ய பாராட்டி பரிசளிக்கப்பட்டது.தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டியதற்கும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.குறிப்பாக தொண்டியில் அல்ஹிலால் மெட்ரிகுலேஷன் பள்ளியுடைய 10ம் வகுப்பில் இனாயா 495 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் 4வது இடமும் மாவட்டத்தில் 2வது இடமும் பெற்ற  மாணவிக்கு கௌரவப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பெற்றோர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் இறுதியாக சமூக நீதி மாணவர் இயக்கத்தின் தொண்டிபேரூர் செயலாளர் ரியாஸ் நன்றி கூறினார்.இந்த நிகழ்வை  மைதீன்,பரக்கத் அலி,ஹம்மாது, ஜலால்,சாபிர் அலி,இப்ராஹிம், பெரியசாமி,நவ்ஃபிக்,சிஹான் மற்றும் தொண்டி தமுமுக பேரூர் நிர்வாகிகள் சமூக நீதி மாணவர் அமைப்பு நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button