அமைச்சரை வரவேற்ற தவெகவினர்

தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் ராஜீவ் இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றார்.
அவரை மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பாம்பன் நிர்வாகி கேவிஸ்டன் தலைமையில் மண்டபம் விக்னேஸ்வரன்,தினேஷ் குமார்,செபிலோன்,தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணி,சபரி ராஜ்,அந்தோணி லோபஸ் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த வினோத்,சூர்யா,விஜய் சமய முத்துகிருஷ்ணன் மற்றும் மீனவ சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.மண்டபம் பகுதி மீனவர்களின் தேவைகள் குறித்து அவரிடம் தெரிவித்தனர்.தேவைகளை குறித்து வைத்துக் கொண்ட அமைச்சர் ராஜீவ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு தகவல் தெரிவித்து அவர் மூலம் முதல்வர் ஜோசப் விஜய்க்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்து விட்டு அமைச்சர் ராமேசுவரத்திற்கு சென்றார்.



