அரசியல்தமிழகம்

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது:முதல்வர் ஜோசப் விஜய் நிருபர்களை சந்திக்காதது ஏன்?-ராமநாதபுரத்தில் டி.டிவி.தினகரன் கேள்வி…!

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் பிரதமரை சந்தித்த பின்பு முதல்வர் ஜோசப் விஜய் நிருபர்களை சந்திக்காதது ஏன் எனவும் ராமநாதபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பினார்.

ராமநாதபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஓரணியில் இணைவார்கள்:-

தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்து 2 வாரங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்,ரவுடியிசம் அதிகரித்து வருகிறது.இன்னும் 6 மாத காலத்தில் தவெக ஆட்சி குறித்து மக்கள் தெரிந்து கொள்வார்கள்.அதிமுக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் பேசி அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி அதிமுகவில் இருந்து பிரிக்க முயற்சித்தனர்.தற்போது த.வெ.க.வின் பொய்யான வாக்குறுதியை அறிந்த பலரும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஓரணியில் இணைவார்கள்

மக்கள் வருந்துகின்றனர்:-

த.வெ.க.வில் இணைந்த வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட உண்மையான விசுவாசிகள் விரைவில் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்கும் முதலமைச்சர்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்த பின்பு நிருபர்களை சந்தித்து பிரதமருடன் நடந்த உரையாடல் குறித்து விளக்குவது வழக்கம்.இதுவரை நிருபர்கள் மற்றும் உள்துறை மந்திரியை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏன் சந்திக்கவில்லை? அரசியல் மாற்றம் வேண்டும் என நினைத்த மக்கள் இப்போது வருந்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button