தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் கிருஷ்ணா மருத்துவமனை:அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் திறந்து வைத்தார்…!

ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிருஷ்ணா மருத்துவமனையை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க. ராஜீவ் நேற்று திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை,லேப்ராஸ் கோபி,எண்டோஸ்கோபி,லேசர் சிறப்பு நிபுணர் டினேஷ் முகில் மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு நிபுணர் டாக்டர் நந்தினி ஆகியோரால் ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் பிள்ளை ஊரணி எதிரில் அனைத்து நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கிருஷ்ணா மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.பொது அறுவை சிகிச்சை,எலும்பு முறிவு சிகிச்சை,,வயிறு குடல் அறுவை சிகிச்சை,மூளை தண்டுவட அறுவை சிகிச்சை,பொது மருத்துவம்,இருதய நோய்,மூளை நரம்பியல்,விபத்து அவசர சிகிச்சை,மகப்பேறு மருத்துவம்,வலியில்லா சுகப்பிரசவம்,பச்சிளம் சிசு மற்றும் குழந்தைகள் மருத்துவம்,கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை,குழந்தையின்மை கருத்தரிப்பு சிகிச்சை உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவ வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. டாக்டர் டினேஷ் முகில்,நந்தினி,நாகராஜன்,பிரேமா,விமலா,டாக்டர் அருண்,வீரகணேஷ் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.கே.ராஜீவ் புதிய மருத்துவமனையை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.கிருஷ்ணா மருத்துவமனையை கட்டிக் கொடுத்த ரெத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர்,நகர் அதிமுக செயலாளர் பொறியாளர் என்.ஆர்.பால்பாண்டியன்,நிர்வாக இயக்குனர் ரெத்தினம் ஆகியோருக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விழாவில் பங்கேற்றவர்களுக்கு டாக்டர்கள் டினேஷ் முகில்,நந்தினி மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அமுதா ராணி,மேனேஜர் கார்த்தி,பி.ஆர்.ஓ ராஜாராம் பாண்டியன்,குமார் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button