தமிழகம்மாவட்டச் செய்திகள்

சைபர் கிரைம் குற்றத்திற்கு வங்கி கணக்கு அட்டைகளை பொதுமக்கள் வழங்க வேண்டாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!

ராமநாதபுரம் மாவட்டம் வல்லபை நகர் பகுதியில் உள்ள வீட்டுகளை உடைத்து நகை திருடிய வழக்கில் 46 சவரன் நகையை தேனியில் வைத்து பறிமுதல் செய்த ராமநாதபுரம் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்கிக் கொள்வதால் அறிமுகமில்லாதவர்களுக்கு வங்கி கணக்கு அட்டையை வழங்க வேண்டாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் புறநகர் பகுதியான வல்லபை நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த 10-ம் தேதி இரவு நேரத்தில் அடுத்தடுத்து வீடுகளை உடைத்து சுமார் 50 சவரன் நகை மற்றும் பணம் திருடு போனது.

இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன்,அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் நடந்திய விசாரணையில் திருடிய நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி தேனியில் பதுங்கி இருந்தது தெரியவந்ததையடுத்து ராமநாதபுரம் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் பணம் மற்றும் நகைகளை திருடிய அர்ஜுன் (24),வேட்டைக்காரன்(30) ஆகிய இருவரையும் தேனியில் வைத்து ராமநாதபுரம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 46 சவரன் தங்கம் கட்டிகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அதே போல் நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் அரசு உதவி கிடைக்க தங்கச்சங்கிலி அணிய கூடாது என அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை நூதனமாக நிருடி சென்ற ஒரு சில மணி நேரத்தில் தங்க நகை திருடி சென்ற நபரை பஜார் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த வாரம் முகூர்த்த நாளை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தில் சென்ற அஜித்குமார் மற்றும் முனீஸ்வரன் இருவரும் பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.தங்க சங்கிலியை பறிமுதல் செய்து நகை திருட்டில் ஈடுபட்ட அஜித் மற்றும் முனீஸ்வரன் இருவரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் அவர்களிடம் இருந்து தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

திருட்டு மற்றும் நகை பறிப்பு சமூகங்களில் ஈடுபட்டவர்களை அடுத்தடுத்து கைது செய்து நகைகள் பறிமுதல் செய்த போலீசாரை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் பாராட்டி பரிசு தொகை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களால் குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.குற்ற சம்பவங்கள் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்து இருக்கிறது.சைபர் குற்றம் தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரால் கடந்த மாதத்தில் 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கமிஷனுக்காக ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு அறிமுகம் தெரியாத நபர்களிடம் வங்கி கணக்கு அட்டையை வழங்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button