அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கம்-தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கண்டனம்!!!

தமிழ்நாடு பத்திரிகையாளர் (TUJ) சங்க மாநில தலைவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி இன்று (28.05.2026) எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய் பிரதமரை சந்திக்க இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற போது பத்திரிகையாளர்களை அவர் சந்திக்காதது விமர்சனத்திற்குள்ளானது.இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று (28.5.2026) விரிவான செய்தி வெளியானது.இதே போல் தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகம் முழுவதும் நடபெற்ற கொலைகள் குறித்தும்,முதல்வர் ச.ஜோசப் விஜய் வீட்டிலிருந்து தலைமைச் செயலகம் வரும் வழியில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கடந்த இரண்டு நாட்களில் செய்தி வெளியானது.அரசின் செயல்பாட்டை விமர்சித்து செய்தி வெளியிட்ட காரணத்திற்காக புதிய தலலமுறை முடக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.இதை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் தமிழ்நாடு பத்தகரிகையாளர் சங்கத்தின் (TUJ) சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.



