தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்மணிக்கு காது,மூக்கு,தொண்டை சிகிச்சை பிரிவில் தொடர் தீவிர சிகிச்சை:ராமநாதபுரம் மருத்துவமனை டீன் அமுதா ராணி தகவல்!!!

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காது,மூக்கு,தொண்டை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பால்க்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனை டீன் அமுதா ராணி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

கடந்த 4 வருடங்களாக மூக்கடைப்பு, தலைவலி மற்றும் மூக்கில் நீர் வடிதல் பிரச்சனைகளுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது,மூக்கு,தொண்டை சிகிச்சை பிரிவில் தமிழ்செல்வி (35) கடந்த (18.05.2026) அன்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு,21.05.2026 அன்று முழுமயக்க மருந்து கொடுத்து அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது, நோயாளியின் இருதய துடிப்பில் மாற்றம் ஏற்பட்டதால் (Pulseless Ventricular Tachy Cardia) அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு செயற்கை சுவாசக் கருவியுடன் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து,தீவிர மருத்துவக் கண்காணிப்பில் நோயாளியின் இருதய துடிப்பும்,இருதயத்தின் செயல்பாட்டுத் திறனும் முன்னேற்றம் அடைந்துள்ளது.நுரையீரல் செயல்பாடு சீராக இருப்பதற்கு Bronchoscopy சிகிச்சை தற்போது செய்யப்பட்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.மருத்துவப் பயனாளியின் மூளை செயல்பாட்டுத் திறனும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையின் மூலம் பின்னடைவு ஏற்படாமல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஒரு வார தீவிர மருத்துவக் கண்காணிப்பில் நோயாளி செயற்கை சுவாச உதவியுடன் இருதய நுரையீரல் மற்றும் மூளை நரம்பியல் செயல்பாடுகள் சீரான நிலையில் இருந்து வருகிறது.மேலும்,நோயின் தன்மையில் முன்னேற்றம் அடைய நோயாளிக்குத் தேவையான தொடர் செயற்கை சுவாச (Tracheostomy) மூலம் சிகிச்சையை தொடர்ந்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button