தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்:மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை!!!

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் எதிர்வரும் 2.6.2026 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணியளவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா,மற்றும் தி.மு.க ஆக்கப்பணிகள் குறித்து விவாதிப்பது தொடர்பாக ராமநாதபுரம் பாரதி நகர் பீமாஸ் வைஸ்ராய் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் வ.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.முன்னாள் அமைச்சர்,தி.மு.க தேர்தல் பணி குழு தலைவர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் எம்.எல்.ஏ கலந்து கொள்ள இருக்கிறார்.ஆகவே இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில,மாவட்ட நிர்வாகிகள்,தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய,நகர,பேரூர் தி.மு.க செயலாளர்கள்,நிர்வாகிகள்,இந்நாள்,முன்னாள் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் நிர்வாகிகள்,கிளைக் தி.மு.க,வார்டு தி.மு.க செயலாளர்கள்,வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் (BLA2) மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட தி.மு.க முன்னோடிகள்,தி.மு.க தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button