தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்:கலெக்டர் தகவல்!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

1.விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை,2.இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை,3.ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை,4.கல்வி உதவித் தொகை,5.திருமண உதவித் தொகை,6.மகப்பேறு உதவித் தொகை,7.மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடுசெய்தல்,8.முதியோர் ஓய்வூதியம்

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில்,நிலமற்ற விவசாய கூலி,உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.

மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்கள் அறிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button