ராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால இலவச நீர்,மோர் பந்தல்:மண்டபம் மேற்கு ஒன்றிய நிர்வாகி G.M.முரளி ஏற்பாடு!!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் தமிழ்நாடு முதல் – அமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டு எதிரே தமிழக வெற்றிக்கழகம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோடைகால இலவச நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழக வெற்றிக்கழக தலைவர்,தமிழ்நாடு முதல் – அமைச்சர் ஜோசப் விஜய்,பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் ஆணைக்கிணங்க,தலைமைக்கழக அறிவுறுத்தலின் படி முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாவட்ட வாரியாக கோடைகால வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் தணிக்கும் வகையில் கோடைகால இலவச நீர்,மோர் பந்தலை திறந்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்கழகம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் மண்டபம் மேற்கு ஒன்றிய நிர்வாகி G.M.முரளி ஏற்பாட்டில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டு எதிரே அமைக்கப்பட்டிருந்த கோடைகால இலவச நீர்,மோர் பந்தலை மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்து இளநீர்,தர்பூசணி,வெள்ளரிக்காய்,மோர் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வெயிலின் வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.



