ராமநாதபுரத்தில் கலைஞர் 103-வது பிறந்தநாள் விழா கோலாகலம்…!

ராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 103-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர்,தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் துணை முதல்வர் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் படி,தலைமைக்கழக அறிவுறுத்தலின் படி தமிழக முன்னாள் முதல்வர்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் தெற்கு நகர் தி.மு.க சார்பில் நகர் செயலாளர்,நகர் மன்ற துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி,மரியாதை செய்தார்.அதனைத் தொடர்ந்து பொதமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க செயலாளர்,நகர்மன்ற சேர்மன் ஆர்.கே.கார்மேகம் உட்பட மாவட்ட,நகர்,ஒன்றிய,பேரூர்,கிளை நிர்வாகிகள்,தொண்டர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



