பரமக்குடி மற்றும் கமுதியில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடங்கள்:கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு!!!

ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி மற்றும் கமுதியில் இன்று (05.06.2026) பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை கட்டடம் மற்றும் அரசு மருத்துவமனை கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.57.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டங்களை பார்வையிட்டு தரைத்தளம் முதல் நான்கு தளங்கள் வரை கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் உட்கட்டமைப்புகளை பார்வையிட்டதுடன்,பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப தேவையான குடிநீர் வசதி, மின்விளக்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை சரியான முறையில் அமைத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர் கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு அதன் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததுடன்,பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பார்த்திபனூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உட்கட்டமைப்பு வசதி குறித்து கேட்டறிந்ததுடன்,நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சையினை உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என மருத்துவர்களுக்கு மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யாஷீநிகம்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன்,பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.முத்தரசன்,இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.நடராஜன்,கமுதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மரு.பிரபாகரன்,உதவி செயற்பொறியாளர்கள் அருணகிரி,வைத்தியலிங்கம்,உதவி பொறியாளர் ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



