தமிழகம்மாவட்டச் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…!

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பாபு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்த நிலையில் ஒரு பகுதியாக இன்று உச்சிப்புளி அடுத்த நாகாச்சி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை பெண்களுக்கு 250-க்கும் மேற்பட்டோருக்கு சேலை,மாஸ்க்,கையுறை,உணவு போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து குலவை இட்டு வரவேற்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது.இதில் கட்சி நிர்வாகிகள் கேவிஸ்டன்,ரூபின்,சந்தியா மற்றும் மண்டபம் உச்சிப்புளி ராமநாதபுரம் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



