தமிழகம்
“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” : நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜக சித்தாந்த அடிப்படையிலான கட்சி. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஓர் இயக்கம், கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.
பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்கு சென்றாலும் தமிழ், தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மொழியைப் பற்றி பேசி வருகிறார். அண்மையில் நமது செப்பேடுகளை கூட மீட்டு வந்திருக்கிறார்.
தமிழகத்துக்கு எல்லா நிதிகளையும் கொடுக்கிறது. சாலைகளும் போடப்படுகிறது. ரேஷன் பொருட்களையும் மத்திய அரசு தான் கொடுக்கிறது” என்று தெரிவித்தார்



