தமிழகம்

அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கம்… இதுவரை 5 லட்சம் பேர் இணைவு..!

அண்ணாமலை தொடங்கிய wetheleader.org என்ற இயக்கத்தில் 4 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

wetheleader என இயக்கமாக தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்ட 4 மணிநேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் wetheleader இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

முன்னதாக, பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் நேரலையில் மக்களை சந்தித்து பேசினார்.

அண்ணாமலை பொதுமக்கள் நேரலையில் சந்திக்கும் நிலையில் அவர் அறிவித்த இயக்கத்தில் உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.

நேரலையில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அண்ணாமலை அறிவித்த இயக்கத்தில் உறுப்பினர்கள் வேகமாக சேர்ந்து வருகின்றனர்.

அண்ணாமலை அறிவித்த We the leader இயக்கத்தில் 1 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.

www.wetheleader.org இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button