தமிழகம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தபோது பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததை அடுத்து கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

வழக்குப் பதிவு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்திய நிலையில், தவெக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button