கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்:மாவட்ட கலெக்டர் பங்கேற்பு!!!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மாணவ,மாணவிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவதன் நோக்கம் நம்மை சுற்றியுள்ள இடங்களை தூய்மையாகவும்,சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.அந்த வகையில் ஒவ்வொரு மாணவரும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். நாம் இருக்கும் இடம் பசுமை நிறைந்த பகுதியாக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் தூய்மையான காற்று,நல்ல தண்ணீர் கிடைக்கும்.எனவே ஒவ்வொருவரும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி பசுமை நிறைந்த பகுதிகளாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ததுடன்,பள்ளி வளாகங்களில் அதிகளவு மரக்கன்று நடவுச்செய்து பராமரித்திடவும்,ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் கோட்டைமேட்டில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரி மாணவிகளுக்கான சீர்மரபினர் மாணவியர் விடுதி கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு,அதன் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் பசும்பொன்னில் தேவர் திருமகனார் மணிமண்டபம் வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள திருமண மண்டபத்திற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கமுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு உள்ளதை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
இந்ந நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன்,பரமக்குடி ஆர்.டி.ஓ ஞா.சரவண பெருமாள்,கமுதி யூனியன் பி.டி.ஓக்கள் மேராஜ்,சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



