தமிழகம்மாவட்டச் செய்திகள்
மரக்கன்று நட்ட அமைச்சர்கள்…!

தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மரு.வே.கே.ராஜீவ் ஆகியோர் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்ற “உலக சுற்றுச்சூழல் தின” விழாவில் கலந்துகொண்டு, மரக்கன்றினை நட்டனர்.இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் ஆஷா அஜித்,முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ராவ் ரெட்டி,முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



