நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் பிரச்சார கூட்டம்
ராமநாதபுரம்,ஜீன்.28:-
நீட் தேர்வு குளறுபடியால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆதரவாக நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அனைத்து முறைகேடுகளுக்கும் விசாரணை நடத்த வேண்டும். நிர்வாகத் தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாவட்ட காங்.கமிட்டி சார்பில் பிரசாரக் கூட்டம் நடந்தது.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாலியா பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் எம்.சி தலைமை வகித்தார். வட்டார தலைவர் காருகுடி சேகர் வரவேற்றார். மாநில செயலாளர் ஆனந்த குமார், மாவட்ட மனித உரிமை பிரிவு தலைவர் செய்யது அபுதாஹீர்
மாவட்ட சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் வாணி இபுராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் குமரி மகாதேவன் கண்டன உரை ஆற்றினார்.

மகிளா காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தி, சிறுபான்மை பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் வாணி இபுராஹீம், சேவா தள காங் மாவட்ட தலைவர் கணேசன்,வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் அன்பு செழியன், ஆகியோர் பேசினர்.
ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் அடையார் பாஸ்கரன், நகர்மன்ற உறுப்பினர் லயன் SAG.மணிகண்டன்,வட்டாரத் தலைவர்கள் சேதுபாண்டியன் (திருப்புல்லாணி),வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி (போகலூர்), மாவட்ட மாணவர் காங் தலைவர் சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.முன்னதாக ராமநாதபுரம் நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்து நீட் தேர்வு குளறுபடிகளுக்கும்,மாணவர்கள் தற்கொலைக்கும் காரணமான பா.ஜ.க அரசு தனது நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை விளக்கி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாலியா பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் எம்.சி பேட்டியளித்தார்.



