தமிழகம்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் : தாசில்தார் கோகுல் நாத் துவக்கி வைத்து பார்வையிட்டார்
முதுகுளத்தூர்,ஜீன்.28:-
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மேலப்பள்ளி வாசலில் கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை முதுகுளத்தூர் தாசில்தார் கோகுல்நாத் தொடங்கி வைத்தார்.இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.நிவேதா தலைமை வகித்தார்.மருத்துவ அலுவலர் டாக்டர்.பவித்ரா வர்ஷினி முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர்கள் நேதாஜி,கருணாகர சேதுபதி,மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .



