ராமநாதபுரம் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் : டி.ஆர்.ஓ வ.சங்கரநாராயணன் துவக்கி வைத்து பார்வையிட்டார்

ராமநாதபுரம்,ஜீன்.28:-
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் புதுத்தெருவில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டி.ஆர்.ஓ வ.சங்கரநாராயணன் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து,முகாமினை பார்வையிட்டார்.
மாவட்ட சுகாதார அலுவலர் (இராமநாதபுரம்) மரு.KV.அர்ஜுன் குமார் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு முழுவதும் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் 6T60T 1515 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 86491 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தவிர்த்து நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் ஆகிய இடங்களில் போலியோ முகாம்கள் அமைத்தும் நேற்று காலை 7.00 மணி முதல் வழங்கப்பட்டது.முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு முகாம்கள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் நகராட்சி நகர் நல அலுவலர் மரு.ரெத்தினக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



