அரசுத்துறைதமிழகம்

8 APRO-க்களுக்கு PRO-க்களாக PROMOTION 

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 8 உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வந்த 8 உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் விவரம் வருமாறு:

1.ச.சிவக்குமார் – சென்னை மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் , தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.எஸ்.செல்வலெட் சுஷ்மா – கன்னியாகுமரி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர். தர்மபுரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.மு.சுதாகர் – திருச்சி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4.என்.ஜி.நந்தகுமார் – வேலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5.கே.எம்.எஸ்.முகமது ரியாஸ் – ஆளுநர் மாளிகை உதவி மக்கள் தொடர்பு அலுவலர். அதே அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

6.என்.விஜயகுமார் – ராமநாதபுரம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. எஸ்.எஸ்.சதீஷ் பாபு – காஞ்சிபுரம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர். தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8.எம்.கேசவமூர்த்தி – சென்னை தலைமைச் செயலகம் செய்தி வெளியீட்டுப் பிரிவு உதவி மக்கள் தொடர்பு அலுவலர். அதே பிரிவில் மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button