தமிழகம்

கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

முதுகுளத்தூர்,ஜூலை.02:-

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காசநோய் நோயாளிகளுக்கு,நேற்று கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.நிவேதிதா தலைமை வகித்தார்.மருத்துவ அலுவலர் டாக்டர்.பவித்திரா வர்ஷினி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி லேனா மஹால் உரிமையாளரும், மலேசிய தொழில் அதிபருமான டத்தோ L. சரவணன் , காசநோய் நோயாளிகளுக்கு சுமார் ரூ.60,000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்களை (Nutrition Kit) வழங்கினார்.மேலும், 30 நோயாளிகளுக்கு தலா ரூ.500 வீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் முன்னாள் இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காசநோய் மேற்பார்வையாளர் பா.பிரவின் ஆனந்த் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர்கள் K.நேதாஜி, M.ஜெயசந்திரன்,P. சேதுபதி, நிர்வாக உதவியாளர் கார்த்திக், காசநோய் சுகாதார பார்வையாளர் கலைவாணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button