தமிழகம்
பேரையூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி: சாயல்குடி அரசு பள்ளி மாணவர்கள் 5ம் பிடித்து வெற்றி.

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூரில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் கபடி கழகமும்,பேரையூர் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கபடி போட்டியில் தூத்துக்குடி,திருநெல்வேலி,சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன .
இதில் சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி காலிறுதி வரை முன்னேறி 5ம் இடம் பிடித்து,ரூ. 5 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை பெற்றனர் .
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார்,உதவி தலைமை ஆசிரியர் முருகன்,உடற்கல்வி ஆசிரியர் மலையரசன் மற்றும் விடுதி காப்பாளர் திருமூர்த்தி,ஆசிரியர்களும்,மாணவர்களும் பாராட்டினர்.



