க்ரைம்தமிழகம்

ராமநாதபுரம் அருகே பொம்பள பொறுக்கி நிருபர் கைது…!

ராமநாதபுரம் அருகே பத்திரிக்கை நிருபர் போர்வையில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை மாவட்ட காவல்துறையினர் ஸ்கெட்ச் போட்டு காப்பு மாட்டிய  சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மண்டபம் போலீசாரால் கைது செய்யப்பட்ட நமது தேசம் நிருபர் கார்த்திக்…

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் அன்னக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் த/பெ ஆறுமுகம்.இவர் சிவகங்கையை தலைமையிடமாகக் கொண்டு மாதமிருமுறை பத்திரிக்கையாக பதிவு செய்து,மாதம் ஒருமுறை மட்டுமே வெளிவரும் “நமது தேசம்” என்ற பத்திரிக்கையில் ராமநாதபுரம் மாவட்ட நிருபராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.இவரது பிரதான தொழில் வாடகைக்கு வாகனம் ஓட்டுவது.பத்திரிக்கை மாதம் ஒருமுறை வெளிவந்தாலும் தினமும் “பிரேக்கிங் நியூஸ்” என்ற பெயரில் அரசு அதிகாரிகளையும்,காவல்துறையினரையும் போலி ஸ்லைடுகள் மூலம் அவதூறு பரப்பி வந்துள்ளார்.அது ஒருபுறமிருக்க சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் கார்த்திக்.இந்நிலையில் வாடகைக்கு வாகனம் ஓட்டுவது முழுநேர தொழில் என்பதாலும்,இந்து சமூகம் சார்ந்த அமைப்புகளில் விரும்பி பொறுப்பு வாங்கி பணியாற்றி வருவதாலும் இவரது சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க மறுத்த மண்டபம் போலீசாரை தனது போலி ஸ்லைடு மூலம் பல்வேறு கோணங்களில் எந்தவிதமான அடிப்படை ஆதாரமுமின்றி செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வந்துள்ளார்.இது குறித்து மண்டபம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் நமது “காலை அஞ்சல்” நாளிதழ் இணையாசிரியரை தொடர்பு கொண்டு இவரது அவதூறு மிரட்டல் சிலைடுகள் குறித்தும்,காவல்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை மிரட்டி அடிபணிய வைப்பது தொடர்பான ஆதாரங்களுடன் சில தகவல்களை வழங்கினர்.இது குறித்து களத்தில் இறங்கிய நமது நிருபர்கள் குழுவின் விசாரணையில் அனைத்தும் உண்மை என ஊர்ஜிதம் ஆனது.அதனைத் தொடர்ந்து நாட்டின் நான்காம் தூணை சீரழிக்கும் பணியை முனைப்புடன் செய்து வரும் கார்த்திக்கின் பின்புலம் குறித்து ஆராயப்பட்டது.அதன் முடிவில் அவர் மீது முன்பே மண்டபம் போலீசார் பதிந்த 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் நமக்கு தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து உரிய ஆதாரங்களை திரட்டி “நமது தேசம்” பத்திரிக்கை நிருபர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க நாதியில்லை…! என்கிற தலைப்பில் நேற்றைய (13.6.2026) தேதியிட்ட காலை அஞ்சல் நாளிதழில் முதல் பக்கத்தில் முழுப்பக்க செய்தியாக வெளியிட்டிருந்தோம்.அதில் குற்றப்பின்னணி கொண்ட நபரை எந்த பத்திரிக்கையிலும் நிருபராக நியமனம் செய்யக்கூடாது என்பது விதி.அதையெல்லாம் மீறி இவர் மாதம் தவளாமல் எடுத்து கொடுக்கும் அதிகார பிச்சைக்கு ஆசைப்பட்டு “நமது தேசம்” பத்திரிக்கையின் 420 போலி ஆசிரியர் பாலமுருகன் இந்த 420 கார்த்திக்கிற்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார்.தன் மீது வழக்கு இருப்பதால் தனது பெயரில் பத்திரிக்கையை பதிவு செய்யாமல் மனைவி ஜெயப்ரியா பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டு போலி ஆசிரியர் என தம்பட்டம் அடித்துக் கொண்டு சிவகங்கை சீமையையே சீரழித்து வருகிறார்.இவர் கொடுத்த அசைண்மெண்ட்டை சரியாக செய்யும் விதமாக கார்த்திக் “ஊடக சுதந்திரம்” என்ற பெயரில் அரசு அதிகாரிகள் தொட்டு இரவு,பகல் பாராது மக்களுக்காக பணியாற்றும் காவல்துறையினர் வரை அவதூறு சேற்றை வாரி இறைத்தும் வந்துள்ளார்.இந்நிலையில் நமது “காலை அஞ்சல்” நாளிதழில் வெளியான செய்தியை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் இது தொடர்பான விசாரணையை ஜரூர் வேகத்தில் முடுக்கி விட்டுள்ளார்.இந்நிலையில் தான் அனைத்து சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவதை விடுத்து,வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணிடம் அத்துமீறி கொலைமிரட்டல் விடுத்த பொம்பள பொறுக்கியாகவும் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.மண்டபம் முல்லை நகரில் வசித்து வரும் மீனாட்சி க/பெ கணேசன் என்பவர் மண்டபம் போலீஸ் ஸ்டேசனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த புகாரின் விசாரணைக்கே ஆஜராகாமல் போலீசாரை ஏமாற்றி வந்துள்ளார்.தற்போது நமது செய்தியின் மூலம் போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் அந்த பெண் கொடுத்த புகார் உண்மை என ஊர்ஜிதம் செய்த போலீசார் பொம்பள பொறுக்கி “நமது தேசம்” நிருபர் கார்த்திக்கை அலேக்காக தூக்கி வந்து சில மணி நேரங்களாக போலீசார் பாணியில் நடத்திய விசாரணையில் உண்மை புலப்பட்டது.அதனைத் தொடர்ந்து பெண்ணிடம் அத்துமீறல்,கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரானது தமிழக காவல்துறை என்பது பழமொழி.ஆனால் எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் பெண்கள் பாதுகாப்பில் காவல்துறையினருக்கு எவ்வித சமரசமும் கிடையாது என்பதை ஆணித்தரமாக நிரூபணம் செய்யும் வகையில் காவல்துறையினரை அவதூறு சிலைடுகள் மூலம் சித்தரித்த போது கூட பொறுமை காத்து தற்போது முதல்வர் ஜோசப் விஜய் சொன்னதை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பதை கருத்தில் கொண்டு தீவிர விசாரணையை முடுக்கி விட்ட ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

420க்களின் போலி தலைவனான பாலமுருகனை முதலில் புடிச்சு ஜெயில்ல போடுங்க சிவகங்கை எஸ்.பி சார்…!

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு R.சிவபிரசாத்…

சிவகங்கை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு தனது மனைவி ஜெயப்பிரியா பெயரில் “நமது தேசம்” என்ற பத்திரிக்கையை பதிவு செய்து வைத்து கொண்டு தமிழகம் முழுவதும் குற்றப்பின்னணி 420க்களை நிருபர்களாக நியமித்த 420க்களின் தலைவன் பெயர் பாலமுருகன்.

டுபாக்கூர் ஆசிரியர் நமது தேசம் பாலமுருகன்…

இவர்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பொம்பள பொறுக்கிக்கு நிருபர் வேலை கொடுத்து கடைசியில் ஆட்டம் ரொம்ப ஓவரானதால ஜெயிலுக்கே போயிட்டாரு.ராமநாதபுரம் மாவட்டம் ஒரு சாம்பிள்தான்.ஆனால் தமிழகம் முழுவதும் முழுநேர 420க்களை மட்டுமே இவர் நிருபராக நியமித்துள்ளார்.ஆக இந்த 420க்களின் தலைவனான பாலமுருகனை ஏன் சிவகங்கை மாவட்ட காவல்துறை இன்னும் விட்டு வைத்திருக்கிறது என தெரியவில்லை.சிவகங்கை மாவட்ட காவல்துறை இவரை பத்திரிக்கை ஆசிரியர் என்று பார்த்தால் இவர் ஆசிரியரே கிடையாது.இவர் மனைவி ஜெயப்பிரியாதான் ஆசிரியர்.தமிழகம் முழுவதும் குற்றப்பின்னணி கொண்ட  420க்களை நிருபர்களாக நியமித்து பத்திரிக்கைத்துறையை சீரழித்த காரணத்திற்காகவே இவரை ஜெயிலில் போடலாம்.நமது தேசம் என்ற பெயரில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை குறிப்பாக காவல்துறையினரை போலி அவதூறு சிலைடு செய்திகளால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வரும் இவர் வெளியில் இருந்தால் நிச்சயம் அவர்கள் நிம்மதியிழந்து தான் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்படும்.எனவே ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்களைப் போல துரித நடவடிக்கை மேற்கொண்டு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு R.சிவபிரசாத் ஐ.பி.எஸ் அவர்களும் 420க்களின் தலைவனான பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் சிவகங்கை மாவட்ட பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் உள்ளனர். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button