கடம்போடை கிராமத்தில் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கடம்போடை கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு “எள்” என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) க.தமிழ் அகராதி தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினார் .



மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ராஜேந்திரன் எள் பயிரில்
விதை தேர்வு குறித்தும் பயிர் இடைவெளி அவசியம்,எள் விதை அளவு ஒரு எக்டேருக்கு 5 கிலோ போதுமானது.மணற்பாங்கான மற்றும் வண்டல் மண் ஏற்றது. இரகம் VRI-4,TMV-7 போன்ற இரகங்களை தேர்வு செய்யலாம் என்று பேசினார். 30 செ.மீ வரிசை இடைவெளியாகவும் 10 செ.மீ செடி இடைவெளியாகவும் இருந்தால் நல்ல காற்றோட்டம் ஏற்படுவதுடன் அதிக மகசூல் உருவாக வாய்ப்பாக இருக்கும். மெக்னீசியம் சல்பேட் ஏக்கருக்கு 2 கிலோ விதைத்த முதல் வாரத்தில் இடவும் அல்லது நுண்ணூட்ட கலவை ஏக்டேருக்கு 5 கிலோ இடவும் இதன் மூலமாக பயிருக்கு தேவையான கந்தகம் சத்து மற்றும் இதர நுண்ணூட்டச்சத்து பயிருக்கு கிடைக்கும்.விதைத்த 15 மற்றும் 30 -ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.மேலும் 80 – 90 நாட்களில் இலைகள் மஞ்சளாகி காய்கள் பழுப்பு நிறமாக மாறும்போது அறுவடை செய்யலாம் எனக்கூறினார்.மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ராஜா கூறுகையில் வேளாண் விளை நிலம் பாதுகாப்பு இயக்கம் குறித்தும் மண் வளத்தை பாதுகாக்க பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை போன்றவற்றை சாகுபடி செய்யலாம் என்று கூறினார். மேலும்,உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறை மற்றும் அவற்றின் பயன்பாடுகள் , சமச்சீர் உரமிடல் பற்றியும் தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ம.அரவிந்த் அவர்கள் மண்மாதிரி சேகரிப்பு பற்றியும் நன்றி உரையும் வழங்கினார்.இப்பயிற்சியின் ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் ச.இந்துமதி செய்திருந்தார்.மேலும் இப்பயிற்சியில் கடம்போடை கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.



