தமிழகம்மாவட்டச் செய்திகள்

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை விளையாட்டு போட்டி:முதுகுளத்தூர் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை:முதுகுளத்தூரில் குத்துச்சண்டை மைதானம் அமைத்து தர அரசுக்கு கோரிக்கை!!!

சென்னை ஆர்.கே நகரில் தமிழ்நாடு மாநில அளவிலான சப் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜூன் 10,11, மற்றும் 12 ஆகிய தினங்களில் நடைபெற்றது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் டைகர் பாக்ஸிங் பிட்னஸ் அகாடமியை சேர்ந்த தில்லை யுவராஜன், லத்திகா சரண் ஆகிய இரண்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.ஆண்களுக்கான சப் ஜூனியர் பிரிவில்
யுவதில்லை ராஜன்(14) கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.பெண்களுக்கான பிரிவில் லத்திகா சரண் (14)என்ற மாணவி கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார்.வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய இரண்டு வீரர்களுக்கு முதுகுளத்தூரில் மாலை மற்றும் சால்வை அணிவித்து சகவீரர்கள் கை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.கைடர் பாக்ஸிங் பிட்னஸ் அகடமி பயிற்சியாளர் பாஸ்கரன் குத்து சண்டை விளையாட்டுப் போட்டி குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில் காவல்துறையினர்,வருவாய்த் துறையினர் மற்றும் விளையாட்டு வீரர்களின் குழந்தைகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர்.மாநில அளவிலான குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜீனாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கான மைதானம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக குத்துச்சண்டை விளையாட்டு மைதானம் அமைத்து தந்தால் தேசிய அளவிலானப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என பெருமிதத்துடன் தெரிவித்தனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button