தமிழகம்
வி.சி.க நிர்வாகி நியமனம்…!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நெய்னா அசாருதீன் என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட துணைச்செயலாளராக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
கடந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட துணைச்செயலாளராக இவரே பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 2-வது முறையாக மாவட்ட துணைச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் நெய்னா அசாருதீனுக்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



