மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற 30-வது ஆண்டு விழா…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டி செவியூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற முப்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் கெட்டி செவியூர் மன்ற தலைவர் மகாலிங்கம் என்கின்ற சீனு தலைமை தாங்கினார்.

ஆன்மீக ஊர்வலம் ஈரோடு தெற்கு மாவட்ட பிரச்சார குழு தலைவர் பொன்னுசாமி எ மணி ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மனோஜ் குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர் ஊர்வலமானது கெட்டி செவியூர் தான்தோன்றியம்மன் திருக்கோவிலிலிருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் நடைபெற்றது ஓம் சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் பாலதண்டபாணி கோபி தொகுதி தலைவர் முத்துசாமி சக்தி கொடி ஏற்றி துவக்கி வைத்தனர்.

கலச விளக்கு வேள்வி பூஜை ஈரோடு மாவட்ட தலைவர் நடராஜ் ஈரோடு தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ் துவக்கி வைத்தனர்.ஆன்மீக சொற்பொழிவு ஈரோடு மாவட்ட பொருளாளர் இளங்கோ ஈரோடு தெற்கு மாவட்ட தணிக்கை குழு தலைவர் சிவக்குமார் ஈரோடு மேற்கு மாவட்ட பிரச்சார குழு தலைவர் கணேசன் சொற்பொழிவு ஆற்றினர்.சிறப்பு விருந்தினராக கெட்டி செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க துணை தலைவர் எல்பி மோகன் குமார் மற்றும் செவ்வாடை தொண்டர்களும் ஊர் பொதுமக்களும் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்புத்தனர்.



