கமுதி பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு…!

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் 13-வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன்,பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில்,இப்பகுதியில் புதிதாக சுகாதார வளாகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இப்பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்குவதை பேரூராட்சியின் நிர்வாகம் கண்காணித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர் கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பு வரை படித்து அரசு பணிக்கு JEO தேர்வில் வெற்றி பெற்ற மாணவனை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியதுடன்,மாணவ,மாணவிகளுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ வ.சங்கரநாராயணன்,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



