
✍️நமது நிருபர்கள் குழு…
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் போரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் “நமது தேசம்” என்ற பத்திரிக்கை பெயரில் மாவட்டத்தின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை அவதூறு சிலைடு மூலம் நேரடியாக மிரட்டல் விடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க நாதியில்லையா? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட காவல்துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு “நமது தேசம்” என்ற பெயரில் வெளிவரும் பத்திரிக்கையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த முரளி (எ) ஸ்ரீமத் கார்த்திக் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவருக்கு பிரதான தொழிலாக வாடகைக்கு ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பணியை செய்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் பல்வேறு சமுதாயம் சார்ந்த இயக்கங்களிலும் பொறுப்பும்,ஆர்வமும் கொண்டவராக திகழும் இவர் மீது மண்டபம் காவல்நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.முதலில் பத்திரிக்கை நிருபராக பணியில் சேர்வதற்கான தகுதியே குற்றப்பின்னணி கொண்டவராக இருக்கக்கூடாது என்பதுதான்.அதே போல் புதிதாக பத்திரிக்கை துவங்கி நடத்த விருப்பமுள்ளவர்களுக்கும் வழக்குகள் ஏதும் நிலுவையில் இருக்கக் கூடாது என்பது இந்திய பத்திரிக்கை பதிவாளர் ஜெனரலின் விதி.ஆனால் “நமது தேசம்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் என போலியாக பிரபலமாகி வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரது மனைவி ஜெய ப்ரியா பெயரில் பத்திரிக்கையை பதிவு செய்து வைத்துக் கொண்டு அவரைப் போலவே குற்றப் பின்னணி கொண்ட 420க்களை தமிழகம் முழுவதும் நிருபர்களாக நியமித்து சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை அணுகி மிரட்டி அதிகார பிச்சை எடுக்க விட்டுள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.மேலும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை செய்தி என்கிற பெயரில் மிரட்டி அடிபணிய வைக்கும் செயலை சிவகங்கை மாவட்டத்தில் பாலமுருகன் செய்து வருவது அங்குள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும்.அதே அசைண்மெண்ட்டை ராமநாதபுரம் மாவட்ட நிருபர் ஸ்ரீமத் கார்த்திக்கிற்கும் கொடுத்திருக்கிறார் போல.தான் சார்ந்த இந்து மத இயக்கம் சார்ந்தும்,தன் தொழில் சார்ந்தும் ஏதாவது நிகழ்வு ஒன்றை நடத்த உள்ளூர் மண்டபம் போலீஸ் ஸ்டேசனில் அனுமதி கோரும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு போலீசார் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.அதனை மனதில் வஞ்சம் வைத்து கொண்டு தான் பணியாற்றும் “நமது தேசம்” பத்திரிக்கை ஸ்லைடில் அப்போதைய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொட்டு போலீஸ் ஸ்டேசன் சார்ந்த ஒருவர் விடாமல் அவதூறு மிரட்டல் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.இதனால் போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக பேசப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் போலீசாரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை கோருவார்கள்.ஆனால் இங்கோ போலீசார் மீதே இல்லாத அவதூறு செய்திகளை மிரட்டும் தொனியில் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீமத் கார்த்திக்.இவர் மீதான நடவடிக்கை என்பது கானல் நீராகவே இருப்பதால் காவல்துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.ஏற்கனவே போலீசார் விடுமுறையின்றி நல்லது,கெட்டதை மறந்து பொதுமக்களுக்காக இரவு,பகல் பாராது கடுமையான மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கு கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஸ்ரீமத் கார்த்திக் போன்ற குற்றப் பின்னணியோடு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பத்திரிக்கையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகமும்,மாவட்ட காவல்துறையும் முன் வர வேண்டும்.இவரின் செயல்களை முன்பே கண்டு கொள்ளாமல் விட்டதன் காரணமாகத்தான் இவர் தற்போது ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக மக்களுக்காக பணியாற்றும் போலீசார் மீது அவதூறு கருத்துக்களை பதிவு செய்ய தொடங்கியுள்ளார்.இவர் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் 5 வழக்குகளையும் ஆராய்ந்து பார்த்தாலே இவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.குறிப்பாக பதிவு பெற்ற பத்திரிக்கையாக இருந்தாலும் தினசரி நாளிதழ்களில் இது போன்ற சிலைடுகள் வெளியிட சட்டத்தில் இடம் உண்டு.ஏனென்றால் மறுநாளே அது பதிவு பெற்ற நாளிதழில் முழுமையான செய்தியாக வெளியாகும் என்பதால்.ஆனால் இவர் பணியாற்றும் பத்திரிக்கையோ மாதமிருமுறையாக பதிவு செய்யப்பட்டு மாதத்திற்க்கு ஒரு முறை மட்டுமே வெளிவரக்கூடியது.இந்த பத்திரிக்கையின் பெயரில் வெளியிடப்படும் சிலைடுகளில் ஆதாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்பது விதி.ஆனால் இவரோ சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி சிலைடு போடப்படுகிறதா? என்பது குறித்தே சந்தேகப்படும் அளவுக்கு வார்த்தைகளை இந்திய பத்திரிக்கை பதிவாளர் ஜெனரல் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வருகிறார்.இவருக்கு செய்தி என்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டிய “நமது தேசம்” பத்திரிக்கை நிர்வாகமும் நீ யார் மீது வேண்டுமானாலும் அவதூறு செய்தி வெளியிடு பார்த்துக்கலாம் என பச்சைக்கொடி காட்டியிருப்பதாகவே தெரிகிறது.மாவட்ட நிர்வாகமும்,மாவட்ட காவல்துறையும் இனிமேலாவது இவரது குற்றப்பின்னணி குறித்து ஆய்வு செய்வதுடன் அவதூறு செய்திகள் வெளியிடும் இவர் போன்ற நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீதான அவதூறு செய்திகள் தொடர்பான களங்கத்தை துடைத்தெறிய முன்வர வேண்டும் என்பதே மாவட்டத்தின் ஒட்டு மொத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மேலும் “நமது தேசம்” பத்திரிக்கை நிருபர் ஸ்ரீமத் கார்த்திக் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் மண்டபம் பகுதியில் சட்டவிரோத மாமூல் வசூலில் ஈடுபடுவது குறித்தும்,ஆதாரத்துடன் நமது நிருபர்கள் குழு தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறது.பரபரப்பான தகவல்கள் ஆதாரங்களுடன் வெளியிட்டு விரைவில் இவரது முகத்திரை கிழிக்கப்படும்.அதற்குள் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டி.ஐ.ஜி மற்றும் போலீஸ் சூப்பிரண்டிற்கு கோரிக்கை…!
காலை அஞ்சல் நாளிதழின் வெளியீட்டாளர் டாக்டர் சிறியூர் செ.செல்லப்பாண்டி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மற்றும் போலீஸ் சூப்பிரண்டிற்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் மணிவண்ணன் ஐ.பி.எஸ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் ஆகியோர் மாவட்டத்தில் தங்களது அதிரடி நடவடிக்கை மூலம் பல்வேறு குற்றச்சம்பவங்களை வெகுவாக குறைத்து வருகின்றனர்.இந்நிலையில் காவல்துறையில் பணியாற்றுபவர்களையே அவதூறு சிலைடுகளால் மிரட்டும் ஸ்ரீமத் கார்த்திக் போன்ற குற்றப்பின்னணி கொண்ட பத்திரிக்கையாளர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கும் செயலாக உள்ளது. “காப்பவர் கடவுள் என்றால் காக்கியும் கடவுளே” என்ற பழமொழிக்கேற்ப ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நிம்மதியாக வாழ தீவிர களப்பணியில் பணியாற்றி கொண்டிருக்கும் காவல்துறையினரையே செய்தி என்ற பெயரில் அவதூறு சிலைடுகளால் மிரட்டி வரும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்ட காவல்துறை மீதான நம்பிக்கையை வலுப்படுத்த முன்வர வேண்டும்.”நமது தேசம்” பதிவு பெற்ற பத்திரிக்கையாகவே இருந்தாலும் செய்திகள் வெளியிடுவதற்கு என ஒரு வரன்முறை உள்ளது.அடிப்படை ஆதாரமின்றி அவதூறு செய்திகளை சேற்றை போல வாரி இறைத்து வருவது கண்டிக்கத்தக்கது.இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் தடுப்பதுடன் சம்பந்தப்பட்ட “நமது தேசம்” பத்திரிக்கை நிருபர் ஸ்ரீமத் கார்த்திக்கின் குற்றப் பின்னணிகளை ஆராய்ந்து அவர் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில் காவல்துறை உட்பட எந்த துறை சார்ந்த அதிகாரிகளும் அவரது அவதூறு செய்தி சிலைடுகளுக்கு இரையாகாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



