தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர் கல்வி சேர்க்கைக்கான மாணவர்கள் குறைதீர் கூட்ட முகாம்:கலெக்டர் தகவல்…!

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை சார்ந்து தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு (SMC) தலைவர்களுக்கு 11.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் 100% உயர் கல்வியில் சேர்வதை தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களை உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வருகின்ற 14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் (GDP Hall) உயர் கல்வி சேர்க்கைக்கான மாணவர்கள் குறைதீர் கூட்ட முகாம் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதில் உள்ள சிரமங்கள்,உயர் கல்வி சேர்க்கை சார்ந்த பொருளாதார உதவி, பெற்றோர் இல்லாத மாணவர்கள்,மாற்றுத்திறன் கொண்ட மாமணவர்கள் மற்றும் சான்றிதழ்கள் பெறுவது போன்ற பல்வேறு தேவை உள்ள மாணவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button