தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பயிற்சி:கலெக்டர் தகவல்…!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராகிவரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.இதனில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள்,மாதாந்திர இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று இன்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது,பணியாளர் தேர்வு வாரியத்தால் (SSC) அறிவிக்கப்பட்டுள்ள Combined Graduate Level (CGL) தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு 22.06.2026 முதல் துவங்கப்படவுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது புகைப்படம் மற்றும் சுய விவரங்களுடன் கலந்து கொள்ளவும்.

இப்பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04567-230160 / 9443992758 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button